Yozen - Exam for First Batch

யோஜன் முதல்கட்ட தேர்வு
குருதேவரின் அற்புத படைப்பான குணப்படுத்தும் வீரக்கலையான யோஜன் முதல்கட்ட தேர்வானது, முதன்முறையாக கல்பாக்கத்தில் 6.3.2022 அன்று மிகச் சிறப்பாக குருதேவர் தலைமையில் வினோத் மாஸ்டர் மற்றும் ராஜ்குமார் மாஸ்டர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பல பேர் பங்கேற்று அவர்களின் முழு ஆற்றலை வெளிப்படுத்தி வீர செயலாற்றி மற்றும் சாதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்று நிரூப்பித்தனர்.
குருதேவர் கூற்றுக்கிணங்க ஒரு கலை வாழ்க்கையாக பரிணமித்தால் மட்டுமே அது முழு பலனை அளிக்கும் அதே போல் யோஜன் கலை இவர்களின் வாழ்கையில் பிரம்மாண்டமான மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை இந்த தேர்வின் மூலமாக உணரமுடிகிறது...
Date : 03/07/2022 9:00 AM