
அதிகாலை அருட்பெரும்ஜோதி யாகம் – 4 am காஞ்சிபுரத்தில்
இம்மண் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!
மகாமகரிஷி போல் ஒரு மகான் பிறப்பதற்கு
என்று குருதேவர் கூறிய வார்த்தைகளுக்கிணங்க நம் பரமகுரு
மஹாமகரிஷி அவர்கள் மரணமில்லாப்பெருவாழ்வு அடைந்த புனித நாளும்,
அவரது சித்தர் பாரம்பரியத்தில் உதித்த முதன்மை சீடர்
இம்மண் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!
மகாமகரிஷி போல் ஒரு மகான் பிறப்பதற்கு
– என்ற வார்த்தைகளுக்கிணங்க
நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் குருதேவர் குணாநீதி மகரிஷி அவர்களின்
பிறந்தநாளுமான இன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் இந்த ஆண்டின்
முதல் அருட்பெஞ்ஜோதி யாகம் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
இன்று மாலை 6 மணிக்கு காஞ்சிபுரம் KPK ரத்னா பாய் திருமண மண்டபத்தில்
நடக்க இருக்கும் அருட்பெரும்ஜோதி யாகம் மற்றும் அகன்ற ஒளியேற்றும் பூஜை
குறித்த தகவல்கள் மற்றும் மஹாயோகம் தியான அன்பர்கள் ஆற்றும் குருசேவைகள்
போன்ற செய்திகள் அனைத்தும் இந்த செய்திதொடரில் பகிர உள்ளோம் மேலும்
விபரங்களுக்கு இணையத்தில் இணைந்திருங்கள்..



அதிகாலை யாகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த தியான அன்பர்களும் பல மாவட்ட பயிற்சி ஆசிரியர்களும், ரிஷிகளும் பங்கேற்று சிறப்பித்தனர்.
மாலை 6 மணி KPK ரத்னாபாய் திருமண
மண்டபத்தில் அருட்பெரும்ஜோதி யாகம்
மாலை 6 மணிக்கு KPK ரத்னாபாய் திருமண மண்டபத்தில் அருட்பெரும்ஜோதி யாகம் சுமார் ஆயிரம்பேர் கலந்துகொள்ள இனிதே துவங்கி நடைபெற்றது
தலைமை ரிஷிகள் மஹாயோகம், குருதேவர், ஆரோக்கியம் மற்றும் யாகம் பற்றிய சிறப்புகளை மக்களுக்கு எடுத்து கூற இனிதே நடைபெற்றது யாகம்.




காஞ்சிபுரம் யாகத்தை தொடர்ந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பெரு நகரங்கள் முதல் தமிழகத்தின் இருபது ஊர்களிலும், பெங்களூரு, ஆஸ்திரலியாவின் பிரிஸ்பேனிலும், அமெரிக்காவில் உள்ள அட்லாண்டவிலும், அருட்பெரும்ஜோதி யாகம் மற்றும் அகன்ற ஒளியேற்றும் பூஜை நிகழத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு யாகத்தில் கலந்துகொண்டு பலன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம். அனைவரும் வருக! அனுமதி இலவசம்!
ஜெய் மகரிஷி! மகிழ்வுடன் வாழ்க!